/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிலைகளை தயாரிக்கும் சிலைமலைப்பட்டி
/
சிலைகளை தயாரிக்கும் சிலைமலைப்பட்டி
ADDED : பிப் 01, 2024 04:25 AM

பேரையூர் : பேரையூர் அருகே சிலைமலைப்பட்டியில் சிலைகள் தயாரிப்பதால் சிலைமலைப்பட்டி என்று பெயர் வந்தது.
இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சிலை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டனர். போதிய வருவாயின்றி பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.
தற்போது 10 குடும்பங்கள் மட்டுமே ஈடுபட்டுஉள்ளனர். இங்கு கோபுர கலசம், கொடிமரம், திருவாச்சி, கவசம், பூஜை மணிகள், ஐம்பொன் சிலைகள் தயாரிக்கப்பட்டு பிற மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.
சங்கர்சிவா: பரம்பரை தொழிலாக செய்து வருகிறோம். போதிய லாபம் இல்லை என்றாலும் மனதிருப்திகாக இத்தொழிலை செய்து வருகிறோம். வங்கி கடன் கேட்டால் அரசு வேலையில் இருக்கிறீர்களா, சொத்து உள்ளதா எனக் கேட்டு திருப்பி அனுப்பிவிடுகின்றனர். அரசு உதவி செய்தால் இத்தொழில் மேம்படும் என்றார்.