ADDED : ஆக 23, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: மதுரையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் குறுவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தன.
இதில் பங்கேற்ற மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு அசார் சல்மான் சிலம்பம் மைய வீரர்கள் பதக்கங்களை வென்றனர். 17 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் ஒற்றைக் கம்பு பிரிவில் பவதாரணி, கலா ரஞ்சனி முதலிடம், 19க்கு வயதுக்குட்பட்டோர் பிரிவில் அஜய்குமார் முதலிடம், 19 வயதிற்குட்பட்டோர் இரட்டைக் கம்பு பிரிவில் அர்ச்சனா முதலிடம் வென்றனர். வீரர்களை பயிற்சியாளர் அசாருதீன் பாராட்டினார்.
