ADDED : பிப் 20, 2024 06:24 AM

அ நிறம் | அளவு
மதுரை : கேலோ இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் மதுரை மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
சென்னையில் நடந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுக்கான துப்பாக்கி சுடுதல் 503 மீட்டர் ரைபிள் போட்டியில் மெல்வினா ஏஞ்சலின், ஹித்தேஸ் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
தடகளத்தின் மும்முறை தாண்டுதல் போட்டியில் பமிலா வர்ஷினி
வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இவர்களை கலெக்டர் சங்கீதா வாழ்த்தினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தமிழ்நாடு துப்பாக்கிச்சுடுதல் சங்கச் செயலாளர் வேல்சங்கர், போலீஸ் தடகள பயிற்றுநர் சந்துரு உடனிருந்தனர்.
