ADDED : டிச 26, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின பூப்பந்து குழு விளையாட்டுப் போட்டியில் மதுரை மாநகராட்சி திரு.வி.க., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இவர்களுக்கு மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பின் தலைவர் கே.முனியசாமி தலைமையில் பாராட்டுவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் அன்புச் செல்வன், உடற்கல்வி ஆசிரியர் கபில் மற்றும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
மாநகராட்சி ஆசிரியர் நலசங்க வழிகாட்டும் தலைவர் ரங்கராஜன், தலைவர் முருகன், நிர்வாகிகள் முனியாண்டி, ராஜகோபால், செந்தில்குமார், ஜெயபால், குமார், சரவணகுமார் பங்கேற்றனர்.

