ADDED : ஜன 24, 2026 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழகத்தில் உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு பணிமேம்பாடு (சி.ஏ.எஸ்.,), சம்பள உயர்வு வழங்க கோரி மூட்டா கிளை சார்பில் மதுரையில் 20க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரைக் கல்லுாரியில் கிளைத் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் கண்ணன், பொருளாளர் மலர்விழி, நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர்கள் கூறுகையில், கல்லுாரிக் கல்வி மதுரை மண்டல இணை இயக்குநருக்கு கீழ் உள்ள 42 அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலும் உள்ளிருப்பு போராட்டங்கள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட கல்லுாரி ஆசிரியர்கள் சம்பள உயர்வின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

