/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏற்றுமதி, மேலாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
ஏற்றுமதி, மேலாண்மையில் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜன 04, 2026 05:02 AM
மதுரை: மதுரை சின்னசொக்கிகுளத்தில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,), கல்பதரு அறக்கட்டளை இணைந்து ஏற்றுமதி சந்தைப்படுத்துதல், மேலாண்மையில் 5 நாள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ஜன.,19ல் துவங்குகிறது.
எம்.எஸ்.எம்.இ., நிறுவன உரிமையாளர்கள், மேலாளர்கள், பணியாளர்கள் பங்கேற்கலாம்.
எம்.எஸ்.எம்.இ., உதயம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., பிரிவினர் 15 பேர் உட்பட 30 பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்த பொருட்கள், கலை படைப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
18 வயதுக்கு மேற்பட்ட 10ம் வகுப்பு முடித்த ஆர்வமுள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்முனைவோர் https://forms.gle/xbY1qMSvBysaxkxd9 என்ற இணைப்பில் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
உணவு, பயிற்சிக்கான பொருட்கள் வழங்கப்படும். தினமும் காலை 9:00 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு 88074 44307ல் தொடர்புகொள்ளலாம்.

