ADDED : அக் 24, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை விவசாயக் கல்லுாரி வளாகத்தில் இயங்கும் சமுதாய அறிவியல் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் சிறுதானிய உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து திறன் மேம்பாட்டு பயிற்சி அக். 27ல் துவங்குகிறது.
20 நாட்கள் வழங்கப்படும் இப்பயிற்சியில், சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறை, உணவு பாதுகாப்புத் திறன், உற்பத்தி செய்யும் முறைகள், வங்கிக் கடன் பெறுதல் குறித்து விளக்கப்படும். தினமும் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயதினர் பங்கேற்கலாம். 25 பேருக்கு மட்டுமே அனுமதி. தொடர்ந்து இடைநில்லாமல் பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு பயிற்சி முடிவில் ரூ.6000 வழங்கப்படும்.
விவரங்களுக்கு 96553 27328ல் தொடர்பு கொள்ளலாம்.

