ADDED : பிப் 07, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வணிகவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
போட்டி நிறைந்த வேலை சந்தைக்கு மாணவர்களை தயார் படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டது.
தென் மாவட்டங்களில் உள்ள 27 கல்லுாரிகளின் சேர்ந்த 750 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் தவசு கண்ணன் வரவேற்றார்.
பெங்களூரு கிறிஸ்ட் பல்கலை பேராசிரியர் ராமராஜ், விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி பேராசிரியர் மஞ்சுளா, அன்னை பாத்திமா கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர் தனலட்சுமி பேசினர்.
ஏற்பாடுகளை கல்லுாரி அலுவலர்கள் முகமது பாசில், கதிரேசன், சிவசுந்தரி, திலக வேணி, ரோசலின் செய்திருந்தனர்.

