தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எஸ்.எல்.சி.எஸ்., ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., முன்னாள் மாணவர் சங்கமம்

 எஸ்.எல்.சி.எஸ்., ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., முன்னாள் மாணவர் சங்கமம்

 எஸ்.எல்.சி.எஸ்., ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., முன்னாள் மாணவர் சங்கமம்


ADDED : ஜன 26, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 05:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) 'முன்னாள் மாணவர்களின் சங்கமம் - 2026' நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் மாணவர்கள் தங்களின் துறை பேராசிரியர்களை சந்தித்து கல்லுாரி வளர்ச்சி, தங்களின் தொழில்முறை வளர்ச்சி குறித்து உற்சாகமாக பகிர்ந்துகொண்டனர்.

மலரும் நினைவாக ஒவ்வொரு துறையில் படித்த மாணவர்களும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கல்லுாரியில் உள்ள 'செல்பி பாயின்ட்'டில் தனியாகவும், குழுவாகவும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர். பலர் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்றனர்.

கல்லுாரிச் செயலாளர் டாக்டர் எல். ராமசுப்பு வழிகாட்டுதல்படி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கங்காதரன், ஆபிரகாம் பிரதீப் செய்திருந்தனர். நிர்வாக மேலாண்மையர் ராம்குமார், முதல்வர் சுஜாதா, துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, இயக்குநர் சுப்ரமணியன், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us