தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சின்னம்மை பரவல் தொடங்கியது; சுகாதாரம் தான் முக்கியம்

 சின்னம்மை பரவல் தொடங்கியது; சுகாதாரம் தான் முக்கியம்

 சின்னம்மை பரவல் தொடங்கியது; சுகாதாரம் தான் முக்கியம்


ADDED : பிப் 14, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் சின்னம்மை வைரஸ் தொற்றின் தாக்கம் தொடங்கியுள்ளது. தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் 16 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். திருமங்கலம் கரடிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட நான்கு பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தற்போது 30 முதல் 50 வயதுக்குட்பட்ட 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு ஆண், பெண் நோயாளிகளுக்கு தலா 25 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு தனியாக உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனிமைப்படுத்துவதற்காக தோப்பூர் வளாகத்திற்கு நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சின்னம்மை நோயின் தாக்கம் குறித்து டாக்டர்கள் கூறியதாவது:

ஏப்ரலில் அதிக வெயிலின் போது சின்னம்மை பரவும். இரண்டாண்டுகளாக பிப்ரவரி துவக்கத்திலேயே நோயின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. ஆனால் அதிக வீரியத்துடன் யாரும் பாதிக்கப்படவில்லை. சின்னம்மையால் பாதிக்கப்பட்டால் தன் சுத்தமும், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து வற்றாமல் பாதுகாப்பதும் அவசியம். நோயாளியை வீட்டிலேயே தனிமைப்படுத்தி காற்றோட்டமான அறையில் தங்கவைக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய தட்டு, டம்ளர், துணிகளை குடும்பத்தினர் பயன்படுத்தக்கூடாது. தும்மினாலோ, இருமினாலோ மற்றவர்களுக்கு எளிதாக பரவும் என்பதால் மற்றவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது.

தேவையான அளவு தண்ணீர், பழங்கள், காய்கறிகள், பழச்சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். உடலின் நீர்ச்சத்து வற்றாமல் கண்காணிக்க வேண்டும். அதிக வெயிலில் குழந்தைகள், முதியோர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். சின்னம்மை வந்தால் வீட்டிலேயே கைவைத்தியம் செய்யாமல் காய்ச்சலுக்கு டாக்டரிடம் சிகிச்சைபெற வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us