ADDED : ஜன 05, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் :   பேரையூர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பாழடைந்த கட்டடம் ஒன்று உள்ளது. அங்கு அட்டை பெட்டிகளை அடுக்கி வைப்பார். நேற்று மாலை மருத்துவமனை ஊழியர் ஒருவர் அட்டைப்பெட்டியை வைப்பதற்காக அங்கு சென்றார்.
அப்போது அங்கு கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருந்தது.  தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து 5 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

