/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இனச் சேர்க்கைக்காக போராடிய பாம்புகள்
/
இனச் சேர்க்கைக்காக போராடிய பாம்புகள்
ADDED : டிச 18, 2024 07:06 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நேதாஜி நகரில் இருந்து பாண்டி கோயில் செல்லும் வழியில் நேற்று 3 சாரைப்பாம்புகள் இணைந்து நடனமாடியபடி இருந்தன. பெரும்பாலும் 2 பாம்புகள் ஜோடி சேர்வதற்காக இது போன்ற நடனத்தில் ஈடுபடும். இந்த இடத்தில் 3 பாம்புகள் நடனமாடியதை பார்த்த சிலர் வீடியோ பரப்பினர்.
நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை சினேக் ரமேஷ் கூறியதாவது: இனப்பெருக்க காலத்தில் பெண்பாம்பின் உடலில் இருந்து ஒருவித வாசனை திரவம் சுரக்கும். இதனை மோப்பம் பிடித்து அப்பகுதியில் இருக்கும் ஆண்பாம்புகள் இணைச் சேர்வதற்காக தேடி வரும். அப்படி வருவதில் பெண்பாம்புடன் இணை சேர்வது யார் என்பதில் மோதல் ஏற்படும். இந்த போராட்டத்தில் வெற்றி பெறும் ஆண் பாம்புடன், பெண்பாம்பு இணையும். இந்த போராட்டம் பாம்புகளின் வலிமையை பொறுத்து 3 முதல் 8 மணிநேரம் வரை நீடிக்கும்.