ADDED : ஆக 25, 2026 05:21 PM
திருப்பரங்குன்றம்: மதுரை கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் விளாச்சேரியில் மண் பொருட்கள் சார்ந்த தொழில் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அகில இந்திய மட்பாண்ட தொழிலாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராமலிங்கம் வரவேற்றார். கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் உதவி இயக்குனர்கள் அன்புச்செழியன், பால மாணிக்கம், பொறுப்பாளர் கலிபுர் ரஹ்மான் பேசினர்.
சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், விளாச்சேரி பொம்மை கிளஸ்டர் தலைவர் சுந்தர் பங்கேற்றனர். ஏற்கனவே கடன் பெற்ற தொழிலாளர்கள் 75 பேருக்கு மானிய தொகை வழங்கப்பட்டது. மட்பாண்ட தொழிலாளர்கள் மகளிர் சங்க தலைவர் அங்காள ஈஸ்வரி நன்றி கூறினார். முகாமில் 20 பேர் தேர்வு செய்து தொழில் துவங்க பயிற்சி அளித்து நவீன இயந்திரங்கள் கொடுக்கப்பட உள்ளது.
