ADDED : ஆக 28, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
மதுரை: வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் தும்பைப்பட்டியில் விவசாயிளுக்கான உழவர் பயிற்சி நடந்தது.
மண்வள மேலாண்மை, இயற்கை வேளாண்மை, நஞ்சில்லா உணவு உற்பத்தி, பயறு வகைப் பயிர்களை பயிரிடுவது குறித்து மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசினார். வேளாண் திட்டங்கள், இயற்கை உரப்பயன்பாடு குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி விளக்கினார்.
துணை வேளாண் அலுவலர் ரகுராமன், உதவி வேளாண் அலுவலர் வெங்கடேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்ணன், சத்திய கீர்த்தனா கலந்து கொண்டனர்.
