ADDED : ஆக 30, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சோலைமலை பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் நாள் வரவேற்பு விழா நடந்தது.
சோலைமலை தொழில் குழும தலைவர் சோலைமலை பிச்சை தலைமை வகித்தார். ஐ.பி.எம்., கார்ப்பரேட் மேலாளர் சிவகுமார் நாராயணன், மாணவர்கள் கணினி துறையில் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், வேலை வாய்ப்புகள் பற்றி பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ஷா, 'வாழ்க்கையில் வெற்றி பெறும் வழிமுறைகள்' குறித்து பேசினார்.
சோலைமலை குழும சி.இ.ஓ., ஆனந்த், செயல் இயக்குனர் அரவிந்த் உட்பட பலர் பேசினர். கல்லுாரியில் ஐ.பி.எம்., சிறப்புத் திறன் மைய திறப்பு விழா நடந்தது. இதில் ஐ.பி.எம்., வணிகப் பங்குதாரர் கிரிதரன், இணை இயக்குனர் நாகராஐன், கல்லுாரி முதல்வர் சுதந்திர வனிதா பங்கேற்றனர்.