தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சோலார் எனர்ஜி, எம்பிராய்டரி பயிற்சி

சோலார் எனர்ஜி, எம்பிராய்டரி பயிற்சி

சோலார் எனர்ஜி, எம்பிராய்டரி பயிற்சி


ADDED : மார் 12, 2024 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் சோலார் எனர்ஜி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் ஆரி எம்பிராய்டரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

நவீன டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி மார்ச் 16, 17 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். கட்டணம் ரூ. 3540. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.

எஸ். இ. ஒ., எஸ்.இ. எம் , கூகுள் விளம்பரம், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் , யூ டியூப், கூகுள் பிசினஸ் ப்ரொபைல் செட் அப், கூகுள் மேப், இ காமர்ஸ் மார்க்கெட்டிங், சாட் ஜி.பி.டி., டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி அளிக்கப்படும். சோலார் எனர்ஜி பயிற்சி மார்ச் 30, 31ல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். 8ம் வகுப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். கட்டணம் ரூ. 3540. சோலார் பி.வி., மற்றும் தெர்மல் சிஸ்டம் இன்ஸ்டலேஷன், ஆன் க்ரிட், ஆப் கிரிட் சிஸ்டம், கனெக்ஷன்ஸ், சோலார் இன்வெர்ட்டர், பேட்டரி டிசைன் மற்றும் வயரிங், சோலர் சிஸ்டம் பற்றி கற்பிக்கப்படும்.

பெண்களுக்கான ஆரி, எம்பிராய்டரி பயிற்சி மார்ச் 18 முதல் ஏப்.5 வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. 8 ம் வகுப்பு முடித்த பெண்கள் பயிற்சி பெறலாம். கட்டணம் ரூ. 4500. கிளாத் பிட்டிங் பயிற்சி, தையல், திரட், கல் வேலைப்பாடு, பாசிமணிகள் வைத்து தைக்கும் பயிற்சி, பிரெஞ்ச் முடிச்சு, டபுள் கட்டா எம்பிராய்டரி, ஆரி பயிற்சி அளிக்கப்படும்.

பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் நகல், எஸ்.சி., எஸ்.டி., ஆக இருந்தால் ஜாதி சான்று நகல் கொண்டு வர வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அலைபேசி: 86956 46417.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us