ADDED : ஏப் 20, 2026 11:24 PM
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில், சோலார் எனர்ஜி, ஏற்றுமதி - இறக்குமதி வழிமுறைகள் குறித்து 2 நாள் பயிற்சி நடக்கிறது.
சோலார் பயிற்சியில், சோலார் ஆற்றல் குறித்து அறிமுகம், வெப்ப அமைப்பு நிறுவுதல், ஆன்க்ரிட் - ஆப்கிரிட் - ஹைப்ரிட் சிஸ்டம், சோலர் இன்வெர்டர் மற்றும் பேட்டரி, டிசைன் மற்றும் வயரிங் வரைபடம், லோடு கணக்கீடு, சோலர் அமைப்பின் பராமரிப்பு கற்றுத் தரப்படுகிறது.
ஏற்றுமதி பயிற்சியில், ஏற்றுமதி - இறக்குமதி செயல்முறை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள், பாதுகாப்பு, கப்பலில் அனுப்புவதற்கான வழிமுறைகள், இன்சூரன்ஸ், விலை நிர்ணயம் குறித்து கற்றுத் தரப்படுகிறது.
ஏப். 25, 26 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர் சேரலாம். இரண்டு பயிற்சிக்கும் தலா ரூ.3540 கட்டணம். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் 86956 46417ல் முன்பதிவு செய்யலாம்.
