/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் விவசாயிகளுக்கு தீர்வு
/
தினமலர் செய்தியால் விவசாயிகளுக்கு தீர்வு
ADDED : நவ 15, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தெற்குத்தெருவில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கூட்டமலி கண்மாய் தண்ணீர் வெளியேறும் பகுதியில் தனிநபர்கள் மணல் மூடை அடுக்கி தண்ணீரை வெளியேற விடாமல் செய்தனர். விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நெல் நாற்றுகள் அழுகியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறையினர் மணல் மூடைகளை அகற்றியதால் விவசாய நிலங்களில் தேங்கிய தண்ணீர் வெளியேறியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.