ADDED : பிப் 12, 2026 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தெற்குத்தெரு நெல் கொள்முதல் நிலையத்தில் வேலையாட்கள் பிரச்னையால் 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூடைகள் தேங்கியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவுபடி வேறு வேலை ஆட்களை கொண்டு நெல் கொள்முதல் துவங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

