ADDED : ஏப் 11, 2026 09:35 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: -வடகாடுபட்டியில் பெருமாள் கோயில் தெருவில் குடிநீர் தொட்டியிலிருந்து பயன்படுத்திய பின் வெளியேறும் தண்ணீர் செல்ல வழி அமைக்கப்படவில்லை. இதனால் தொட்டியின் அருகே தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவியது.
மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர்.
