PUBLISHED ON : செப் 29, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: மாங்குளபட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் தண்ணீர் வீணாகியது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட ஏ.இ., நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் உடைப்பை சரி செய்தனர். சுத்தமான குடிநீர் கிடைக்க உதவிய தினமலர் நாளிதழுக்கும், அதிகாரிக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
