/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிலையூர் கால்வாயில் நிரம்பிய குப்பைக்கு தீர்வு; தினமலர் செய்தி எதிரொலி
/
நிலையூர் கால்வாயில் நிரம்பிய குப்பைக்கு தீர்வு; தினமலர் செய்தி எதிரொலி
நிலையூர் கால்வாயில் நிரம்பிய குப்பைக்கு தீர்வு; தினமலர் செய்தி எதிரொலி
நிலையூர் கால்வாயில் நிரம்பிய குப்பைக்கு தீர்வு; தினமலர் செய்தி எதிரொலி
ADDED : அக் 06, 2025 05:50 AM

திருப்பரங்குன்றம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் பகுதி நிலையூர் கால்வாயில் நிரம்பிய கழிவுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.
வைகை அணையில் திறக்கும் தண்ணீர் நிலையூர் கால்வாய்கள் வழியாக திருப்பரங்குன்றம் தென்கால், பானாங்குளம், ஆரியங்குளம், செவ்வந்திக்குளம், மேலநெடுங்குளம், நிலையூர் பெரிய கண்மாய் உள்பட பல்வேறு கண்மாய்களை நிரப்பும். இக்கண்மாய்கள் மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நிலையூர் கால்வாயில் செடி, கொடிகள் அடர்ந்து கிடக்கின்றன. விளாச்சேரி முதல் சந்திராபாளையம் வரை கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்க்குள் விடப்படுகிறது. தவிர, அனைத்து கழிவுகளும், குப்பையும் கொட்டப்படுகிறது. தண்ணீர் திறக்கப்படும் பொழுது அவை அடித்துச் செல்லப்பட்டு கண்மாய்க்குள் தேங்குகிறது.
மற்ற நாட்களில் நிலையூர் கால்வாய்களில் தேங்கி சுகாதார கேடை ஏற்படுத்துகிறது. அணை தண்ணீர் திறப்பதற்குள் நிலையூர் கால்வாயில் கிடக்கும் குப்பை, கழிவுகளை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து நீர்வளத் துறையினர் நிலையூர் கால்வாயில் தேங்கிய கழிவு, குப்பை அகற்றும் பணியை துவக்கினர். உதவிப் பொறியாளர் சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் ஆய்வாளர்கள் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி வருகின்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை நீர்வளத்துறையினர் நிலையூர் அனைத்து குப்பைஅகற்றி கால்வாய் கரையில் வைக்கின்றனர். சில மாதங்களுக்கு பின் அவை மீண்டும் கால்வாய்க்குள் செல்கிறது. அவற்றுடன் மேலும் குப்பை, கழிவகள் சேர்ந்து கண்மாயை அடைக்கின்றன.
எனவே, தற்போது அகற்றும் கழிவுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.