/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எழுமலை, மேலுார் கோயிலில் சூரசம்ஹாரம்
/
எழுமலை, மேலுார் கோயிலில் சூரசம்ஹாரம்
ADDED : அக் 28, 2025 04:00 AM

எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சூரசம்ஹார வழிபாடு நடந்தது. சுப்பிரமணியர் ஊர்வலமாக ராஜகணபதி முத்தாலம்மன் கோயில் முன்பாக எழுந்தருளினார். அங்கிருந்து பல்வேறு வேடம் எடுத்து வந்த சூரனுடன் போர் புரியும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அவருக்கு அபிஷேகம் செய்து பின் மாதாந்திர சுப்பிரமணியர் கோயிலுக்கு கொண்டு சென்றனர். விழாவில் தொடர்ச்சியாக இன்று(அக்.28) காலை 7:35 மணிக்கு மேல் 8:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.
* மேலுாரில் 5 நாட்கள் கந்தசஷ்டி விரதம் முடிந்து 6ம் நாளான நேற்று சிவன் கோயில் முன்பு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சிவன் கோயிலில் இருந்து சப்பரத்தில் விநாயகர், முருகன், சூரவர்மன் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சூரசம்ஹாரம் நடந்தது. சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி நடத்தினார். இன்று காலை அன்னபாவாடை நிகழ்ச்சி, மாலையில் முருகன், வள்ளிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வாணி மகேஸ்வரி செய்திருந்தார்.
* சோழவந்தான் தென்கரையில் மூலநாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, அக்.22ல் காப்பு கட்டுதல், அக்.26ல் அகிலாண்டேஸ்வரி அம்மனிடம் வேல் வாங்குதல் நடந்தது.
நேற்று காலை 8:30 மணிக்கு சத்ருசம்ஹார ஹோமம், மாலை 5:00 மணி அளவில் சூரசம்ஹாரம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று (அக்.28) காலை 8:30 மணிக்கு பாவாடை தரிசனம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் சுவாமி வீதிஉலா நடக்கும்.

