/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தென்னிந்திய கராத்தே, சிலம்பப் போட்டிகள்
/
தென்னிந்திய கராத்தே, சிலம்பப் போட்டிகள்
ADDED : மே 11, 2025 05:02 AM

மதுரை : கேரளாவில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி, சிலம்பப் போட்டி நடந்தது.
இதில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மியாகி வேர்ல்டு கோஜு ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் கராத்தே, சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்றனர். 9 முதல் 15 வயது வரையிலான கராத்தே கட்டா பிரிவில் கேரன் பள்ளி மாணவர் பார்க்கவன் முதல் பரிசு பெற்றார்.
செயின்ட் மேரிஸ் பள்ளி மாணவர்கள் முத்து குரு, முகமத் அமீர்கான், விகாசா ஜூபிலி பள்ளி மாணவர்கள் லோகித், அஜய் கார்த்திக் இரண்டாம் பரிசு பெற்றனர்.
ஜூனியர் பிளாக் பெல்ட் பிரிவில் டால்பின் பள்ளி மாணவர் பிரஜீன் முதல் பரிசு வென்றார். பிளாக் பெல்ட் சீனியர் பிரிவில் மதுரைக் கல்லுாரி மாணவர் சபரிநாதன் முதல் பரிசு வென்றார். சிலம்பப் போட்டியில் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர் பிரணவ் முதல் பரிசு பெற்றார்.
தொழில்நுட்ப இயக்குனர் வைரமணி, தலைமைப் பயிற்சியாளர் பி.ராஜா, கராத்தே பள்ளித் தலைவர் கார்த்திக், பயிற்சியாளர்கள் டி.ராஜா, முத்துகிருஷ்ணன் பாராட்டினர்.