தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தென்னிந்திய ஓபன் கராத்தே

தென்னிந்திய ஓபன் கராத்தே

தென்னிந்திய ஓபன் கராத்தே


ADDED : ஆக 26, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஜி தொக்குக்காய் கராத்தே சார்பில் தென்னிந்திய ஓபன் கராத்தே போட்டி கோவை கதிர் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. பல்வேறு மாநிலங்களின் 950 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை சுந்தராஜன்பட்டி ரைசிங் சாம்பியன்ஸ் தற்காப்பு பள்ளி மாணவர்கள் 28 பதக்கங்களை வென்றனர். சப் ஜூனியர் கட்டா 6 வயது பிரிவில் க்ரித்திக் சாய் வெள்ளி, 9 வயது பிரிவில் முகமத் ராசித் தங்கப்பதக்கம், 10 வயது பிரிவில் மோஹித் வெண்கலம்,

11 வயது கட்டா பிரிவில் எப்ரான் தங்கம், ஹர்தேவ் ராஜன் வெள்ளி, 12 வயது கட்டா பிரிவில் பி. பிரஜன் தங்கம், க்ரித்திக் செல்வம் வெண்கலம் வென்றனர்.

கேடட் 14 வயது கட்டா பிரிவில் தக்ஷின் தங்கம், சஞ்சய் வெள்ளி, நித்திலன் வெண்கலம், சீனியர் கட்டா பிரிவில் ஹரிஷ் தங்கம் வென்றனர். பெண்கள் 8 வயது கட்டா பிரிவில் சாஷினி வெள்ளி, 9 வயது பிரிவில் ஆராத்யா தங்கம்,11 வயது பிரிவில் சத்யா வெண்கலம், 14 வயது பிரிவில் ச ஜீவிதா தங்கம் வென்றனர்.

குமித்தே 8 வயது பிரிவில் எஸ். பிரஜன் வெள்ளி, 9 வயது பிரிவில் யாழ்வேந்தன் தங்கம், சித்தார்த் வெள்ளி, 11 வயது சண்டை பிரிவில் எப்ரான் தங்கம், 12 வயது பிரிவில் பி பிரஜன் வெண்கலம், 14 வயது பிரிவில் ஆதிதேவ் வெண்கலம், சீனியர் பிரிவில் முத்துஇருளன் வெண்கலம் வென்றனர்.

9 வயது சண்டை பிரிவில் ஆராத்யா தங்கம், 11 வயது பிரிவில் லக்ஷிதா தங்கம், 13 வயது பிரிவில் நந்தித்தா வெண்கலம், 15 வயது பிரிவில் சாதனாஸ்ரீ வெள்ளி, அ ஜீவிதா வெண்கல பதக்கம் வென்றனர். வளாகத்தலைவர்கள் சுந்தரகண்ணன், சரவணன், பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us