/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தெற்கு ரயில்வே வார விழா; மதுரைக்கு 6 விருதுகள்
/
தெற்கு ரயில்வே வார விழா; மதுரைக்கு 6 விருதுகள்
ADDED : ஜன 31, 2025 07:23 AM
மதுரை; தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் நடந்த 69வது ரயில்வே வார விழாவில் சிறப்பாக செயல்பட்ட அலுவலகங்கள், ஊழியர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மண்டல அளவில் சிறப்பாக செயல்பட்டமதுரை கோட்ட பொறியியல், போக்குவரத்து, சைகை மற்றும் தொலைத்தொடர்பு, ஊழியர் நலம், மருத்துவம், பண்டகசாலை ஆகிய பிரிவுகளுக்குதெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங்சுழற் கேடயங்களை வழங்கினார்.
முதுநிலை கோட்ட ஒருங்கிணைப்புப் பொறியாளர் கார்த்திக், போக்குவரத்து மேலாளர் பிரசன்னா, தொலைத்தொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், ஊழியர் நல அதிகாரி சங்கரன், முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன், பண்டக பிரிவு மேலாளர் சைலேஷ்குமார் மவுர்யா ஆகியோர் பெற்றனர்.
மதுரை கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தொலைத்தொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், வர்த்தகப் பிரிவு உணவு ஆய்வாளர் சதீஷ், லோக்கோ பைலட் சாஜு, உதவி லோக்கோ பைலட் அய்யாசாமி, தண்டவாளம் பராமரிப்புப் பணியாளர் கிரிராஜ் மீனா, திருநெல்வேலி ரயில் பெட்டி பராமரிப்புப் பொறியாளர் மந்திரமூர்த்தி, போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன், அலுவலக கண்காணிப்பாளர் சுதா ஆகியோருக்கு 'விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்' எனும் சிறப்பு ரயில் சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

