ADDED : பிப் 13, 2026 06:17 AM
மதுரை: மதுரை செந்தாமரை கல்லுாரியில் எப்.எப்.எப் கோஜூரியூ கராத்தே டோ இந்தியா சார்பில் 3வது தென்மண்டல அள விலான கராத்தே போட்டி நடந்தது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு கோஜூரியூ கராத்தே சம்மேளன நிர்வாகத் தலைவர் முத்தையா தலைமை வகித்தார். கல்லுாரி நிர்வாக அறங் காவலர்கள் இளங் கோவன், பிரசன்ன இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.
கேரளா பாலக்காடு கென்கோ மார்ஷியல் ஆர்ட் கராத்தே பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
14 வயது சண்டை பிரிவில் மதுரை ஒய்.டபிள்யூ.சி.ஏ., பள்ளியின் ஸ்ரீகாந்த், 13 வயது கட்டா பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி ஸ்ரீதுல்லா முதலிடம் பெற்றனர். 12 வயது சண்டை பிரிவில் சி.எஸ்.ஆர். பள்ளி ஷாலினி 2ம் இடம், 8 வயது கட்டா பிரிவில் பான்சி வித்யாலயா பள்ளி ரக்ஷிதா 3ம் இடம் பெற்றனர்.
முதல்வர் செந்துார் பாண்டி பரிசுகளை வழங்கினார். தலைமை பயிற்சியாளர் பாரத் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஒருங் கிணைப்பாளர்கள் லஷ் மணன், முத்துசூர்யா, கார்த்திகேயன், நிரூபன்ராஜ், ரியாசுதீன், முகமது ஆதில் கலந்துகொண்டனர்.

