sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கான ரோடு டெண்டர்கள்  பளபளக்குது... கலகலக்குது... ; 'பினாமிகள்' பெயரில் பணிகளா என பொறியாளர்கள் அதிர்ச்சி

/

மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கான ரோடு டெண்டர்கள்  பளபளக்குது... கலகலக்குது... ; 'பினாமிகள்' பெயரில் பணிகளா என பொறியாளர்கள் அதிர்ச்சி

மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கான ரோடு டெண்டர்கள்  பளபளக்குது... கலகலக்குது... ; 'பினாமிகள்' பெயரில் பணிகளா என பொறியாளர்கள் அதிர்ச்சி

மாநகராட்சியில் ரூ.100 கோடிக்கான ரோடு டெண்டர்கள்  பளபளக்குது... கலகலக்குது... ; 'பினாமிகள்' பெயரில் பணிகளா என பொறியாளர்கள் அதிர்ச்சி


ADDED : பிப் 04, 2026 06:41 AM

Google News

ADDED : பிப் 04, 2026 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாநகராட்சியில் குண்டும் குழியுமாக, வாகன ஓட்டிகளை சோதனைக்கு உள்ளாக்கிய ரோடுகளை பளபளக்க செய்யும் வகையில், ரூ.100.35 கோடி ஒதுக்கப்பட்டு, 27.97 கி.மீ.,க்கு 979 ரோடுகளுக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இப்பணிகளை 'பினாமி' பெயரில் பலர் மேற்கொள்ள உள்ளதால் ரோடுகள் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரோடுகள் மிக மோசமாக இருந்தால் ஆளுங்கட்சியினர் ஓட்டுக் கேட்டு செல்ல முடியாது என்ற நிலையில், அமைச்சர் மூர்த்தி முயற்சியால் தமிழக அரசு இந்த நிதியை மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. தலா ரூ. 2 கோடி வரையில் ஒரு 'பேக்கேஜ்' என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு 'பேக்கேஜ்'க்கு 20 முதல் 25 ரோடுகள் எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோல் மொத்தம் 83 'பேக்கேஜ்'க்கான பணிகள் துவங்கியுள்ளன.

புதிய ரோடு டெண்டர்களை மாநகராட்சியில் பதிவு பெற்ற சில ஒப்பந்தக்காரர்களும், அனுபவம் இல்லாத அரசியல் பின்புலம் உள்ளவர்கள் 'பினாமி' பெயர்களிலும் ஒப்பந்தம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதனால் ரோடுகளின் தரம் உரிய முறையில் அமையுமா என கேள்வி எழுந்துள்ளது. இது ரோடு பணிகளை கண்காணிக்கும் மாநகராட்சி பொறியாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

அவர்கள் கூறியதாவது: புதிய ரோடுகள் அமைக்கும் போது அது தரமாக இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு இம்முறை அதிகமாக உள்ளது. அரசியல் பின்புலத்தில் உள்ளவர்களை ஓரளவு மட்டுமே கண்காணிக்க முடியும் என்பதால் எங்களின் கண்காணிப்பு பணிகள் சவாலாகவே இருக்கும். இருப்பினும் ரோடு தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் கமிஷனர் சித்ரா கவனம் செலுத்துகிறார். எனவே ஒவ்வொரு நிலையிலும் ரோடுகளின் தரத்தை கண்காணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சற்று கலக்கமாகவே உள்ளது என்றனர்.

கண்ணா... ரெண்டு லட்டு திங்க ஆசையா...

மதுரை மாநகராட்சிக்கு ரோடு பணிக்காக ஏற்கனவே ரூ.120 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இன்னும் சில ரோடுகள் மாநகராட்சி எல்லைக்குள் விடுபட்டுள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அதற்காக மேலும் ரூ.19.94 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 13 'பேக்கேஜ்'களில் 190 ரோடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான டெண்டரும் விரைவில் கோரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us