ADDED : மார் 18, 2026 04:46 AM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி 'சபாநாயகி' என்ற கதாபாத்திரத்தின் மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையொட்டி 'விரலுக்கும் மை அழகு', 'என் ஓட்டு, என் உரிமை' என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கையெழுத்திடும் நிகழ்ச்சியை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்து ஓவியப் போட்டிகளை பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., அன்பழகன், திட்ட அலுவலர் வானதி, நேர்முக உதவியாளர் பார்த்திபன், மீனாட்சி கல்லுாரி முதல்வர் வானதி, பி.ஆர்.ஓ., சாலிதளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து கலெக்டர், போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் வாகன சோதனைகளை ஆய்வு செய்தனர். மாலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அச்சக உரிமையாளர்கள், வங்கிகள், கூட்ட அரங்குகள், கல்யாண மண்டபங்கள், அடகுக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோரிடம் அரசியல் கட்சிகள் விதி மீறலில் ஈடுபடுவது தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
