UPDATED : அக் 15, 2026 02:18 AM
ADDED : அக் 14, 2026 05:58 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நகர் மின்வாரிய கோட்டம் சார்பில் அரசரடி துணை மின் நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி சூரிய இல்லம் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
மேற்பார்வை பொறியாளர் மோகன் தலைமை வகித்தார். செயற்பொறியாளர்கள் சிவக்குமார், லதா, உதவி செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், ஷெரின்பாத்திமா, ரோஹிணி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் சூரிய ஒளிமின் தகடு விற்பனையார்கள், அரசு துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். சோலார் மின்தகடு அமைக்கும் வழிமுறைகள், கடனுதவி போன்ற விவரங்களை அதிகாரிகள் விளக்கினர்.
