ADDED : ஏப் 04, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை நகர் மின்பகிர்மான கோட்ட பகுதிகளில் மின்நுகர்வோருக்கான சிறப்பு முகாம்கள் நாளை (ஏப்.5) காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
வடக்கு கோட்டத்தில் ஐ.டி.ஐ., எதிரே உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தமுக்கம் பகுதி மின்வாரிய அலுவலகம், தெற்கு கோட்டத்தில் மதுரை கிரைம் பிராஞ்ச் சுப்ரமணியபுரம் பவர்ஹவுஸ், மேற்கு கோட்டத்தில் அரசரடி துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடக்க உள்ளது என, மேற்பார்வை பொறியாளர் பாலபரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.