/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறப்பு காலமுறை ஊதியர்களுக்கும் பென்ஷன் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் வலியுறுத்தல்

ADDED : ஜன 04, 2026 05:14 AM
மதுரை:தமிழகத்தில் உள்ள 4 லட்சம் சிறப்பு காலமுறை ஊதியர்களுக்கும் தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.அரசு பணியாளர்களின் கடைசி மாத 50 சதவீத சம்பளத்தை நிபந்தனையில்லாத பென்ஷனாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் மதுரையில் கூறினார்.
அவர்கூறியதாவது: புதிய பென்ஷன் திட்டத்தையே சிறிதளவு மாற்றம் செய்து தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட பென்ஷன்திட்டம் என்று அறிவித்துள்ளனர். இதில் நிறையும், குறையும் கலந்தே உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை மறு அமலாக்கம் செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் முதலீடு தேடுவதற்கு பதிலாக பழைய பொது வருங்கால வைப்பு நிதியை மறு அமலாக்கம் செய்வதன் மூலம் 1.5 கோடி பேரின் பல லட்சம் கோடி முதலீடாக அரசிற்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் உள்ளவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட4 லட்சம் பேர் சிறப்பு கால முறை ஊதியர்களாக உள்ளனர். அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே பென்ஷன் தற்போது வழங்கப்படுகிறது.
சிறப்பு காலமுறை ஊதியர்கள், தொகுப்பூதியம் வாங்குபவர்கள், அவுட் சோர்சிங் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் கடைசி மாத சம்பளத்தில் சரிபாதி அல்லது ரூ.10 ஆயிரம் பென்ஷனாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அரசு பணியில் சேருவதற்கே 30 வயதிற்கு மேல் ஆகும் சூழலில், 30 ஆண்டுகள் பணி செய்வது என்பதற்கு சாத்தியமில்லை. அரசு பணியாளர்களின் கடைசி மாத 50 சதவீத சம்பளத்தை நிபந்தனையில்லாத ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. ஆனால் வளர்ச்சிடைந்த மாநிலமான தமிழகத்தில் ஏன் இன்னும் அறிமுகப்படுத்தவில்லை என்றார்.