ADDED : ஏப் 20, 2026 11:26 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் 'ஹேப்பி கிட்ஸ் ஹப்' என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. மனநல நிபுணர்கள் சந்தியாஸ்ரீ, ஹர்ஷவர்த்தினி தலைமை வகித்துப் பேசினர். மகிழ்ச்சியான செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்தை குறைத்து கற்றலில் கவனம் செலுத்துவது பற்றி விளக்கப்பட்டது.
முன்னதாக நடந்த 'நுால் அரும்புகள்' நிகழ்ச்சியில், நுால் மதிப்புரை செய்த பள்ளிக் குழந்தைகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.
