தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

 சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

 சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு


ADDED : மார் 31, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை; திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே மதுரை வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை, ஜூன் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஞாயிறு தோறும் திருநெல்வேலியில் இருந்து இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06030), அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கோவை வழியாக மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்கிறது.

மறுமார்க்கத்தில் திங்கள் தோறும் இரவு 7:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06029), மறுநாள் காலை 8:05 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.

பயணியர் வரவேற்பு, கோடை விடுமுறையை முன்னிட்டு ரயில் (06030) ஜூன் 28 வரை, ரயில் (06029) ஜூன் 29 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us