தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெல்லைக்கு சிறப்பு ரயில்

நெல்லைக்கு சிறப்பு ரயில்

நெல்லைக்கு சிறப்பு ரயில்


ADDED : அக் 11, 2025 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2025 05:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தீபாவளியை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்க திருநெல்வேலி - செங்கல்பட்டு இடையே பகல் நேர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அக்., 21, 22 அதிகாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06156) மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06155) இரவு 11:55 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.

கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துாரில் நின்று செல்லும். 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள், ஒரு 'ஏசி சேர் கார்', 12 இரண்டாம் வகுப்பு 'சேர் கார்' பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.

இதற்கான முன்பதிவு நாளை (அக்., 12) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us