/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறமைகளை வெளிப்படுத்துவதில் தனித்துவம் வேண்டும் எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு
/
திறமைகளை வெளிப்படுத்துவதில் தனித்துவம் வேண்டும் எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு
திறமைகளை வெளிப்படுத்துவதில் தனித்துவம் வேண்டும் எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு
திறமைகளை வெளிப்படுத்துவதில் தனித்துவம் வேண்டும் எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு
ADDED : செப் 14, 2025 05:41 AM

மதுரை: மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதில் தனித்துவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,), ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் 27வது பட்டமளிப்பு விழாவில், சென்னை மேவரிக் சிஸ்டம்ஸ் முதன்மை செயல் அதிகாரி என்.என்.சுப்பிரமணியன் பேசினார்.
இவ்விழா கல்லுாரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது. செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, நிர்வாக மேலாண்மையர் ராம்குமார், முதல்வர் சுஜாதா, துணை முதல்வரும் தேர்வாணையருமான (பொறுப்பு) குருபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு பட்டம் வழங்கி என்.என்.சுப்பிரமணியன் பேசியதாவது:
பெரும்பாலான கல்லுாரிகள் இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகளை கொடுக்கும் படிப்புகளை நடத்துகின்றனவா என்பது கேள்விக்குறி. ஆனால் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் கேட்டரிங் அன்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட், அனிமேஷன், பேங்கிங் என வேலைவாய்ப்புகள் தரும் படிப்புகளை வழங்கி வருவதும், அதற்கான கட்டமைப்புகளை கொண்டுள்ளதும் சிறப்பு. பட்டப் படிப்புக்கு பின் வேலை என வந்துவிட்டால் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக நிறுவனம் எதிர்பார்ப்பதை தெளிவாக புரிந்துகொண்டு வெளிப்படுத்துதலில் தனித்துவம், நேர மேலாண்மை, கம்யூனிகேஷன் ஆகிய திறமைகள் முக்கியம். தொடர்ந்து படிக்கும் பழக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். படிப்பதை ஒருபோதும் நிறுத்திவிட வேண்டாம். இது உங்கள் சொந்த வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.
எனவே வாரம் 10 மணி நேரமாவது படிக்கும் பழக்கம் அவசியம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 15 ஆண்டுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதை பெற கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏராளமான 'டூல்ஸ்'கள் தற்போது எளிதாக கிடைக்கின்றன. அறிவை வளர்ப்பதில் ஆசிரியர்கள், சொந்த முயற்சி, நண்பர்கள், அனுபவம் ஆகிய நான்கிற்கும் சமபங்கு உள்ளது என்றார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.