ADDED : பிப் 13, 2026 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் ஆஸ்திரேலிய தமிழ் கலை, பண்பாட்டுக் கழக அறக்கட்டளை சொற்பொழிவு நடந்தது.
இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார். இதில் ஆஸ்திரேலிய தமிழ்க் கலை, பண்பாட்டுக் கழகச் செயலாளர் அனகன்பாபு பேசுகையில், ''ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கலை, பண்பாட்டை நிலை நிறுத்த சித்திரைத் திருவிழா, பொங்கல் விழாக்களை நடத்துகிறோம். தமிழகத்தின் சிறந்த ஆளுமைகளை அழைத்து தமிழர் பண்பாடு, கலை, நாகரிகம், மொழியை பரப்ப, சிட்னி தமிழ் கலை, பண்பாட்டுக் கழகம் தீவிரமாக பணியாற்றி வருகிறது'' என்றார். மதுரை எழுத்தாளர் தீபா நாகராணி, லேடி டோக் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

