ADDED : டிச 15, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : பாலமேடு சாத்தையாறு அணை அருகே உலக சமாதான ஆன்மிக மையத்தில் 12ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
மெய்ஞான செல்வர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து சமாதான கொடி ஏற்றினார். மெய்ஞான ஆசிரியர்கள் முபாரக், ஜெகதீஸ்வரன் முன்னிலை வகித்தனர். யோகிராஜ் பரஞ்சோதி மகரிஷி ஆசி வழங்கினார்.
தியான வகுப்பு மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. மதுரை உலக சமாதான ஆலய குரு பாலசுப்பிரமணியன், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மெய்ஞான ஆசிரியர்கள் பாலகுரு, அய்யாக்குட்டி, பழனிவேல், சண்முகராஜன், ஷாஜிதா பானு, சிராஜ் கான் பங்கேற்றனர். நிர்வாகி பெரோஸ் கான் நன்றி கூறினார்.