ADDED : ஏப் 27, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் ஸ்ரீ காமாட்சி ஸ்ரீவித்யா சகஸ்ர தள பத்மாராதனா சார்பில் ஆன்மிக வகுப்புகள் மதுரை, திருச்சியில் நடந்தது. மதுரை மடத்தில் ஜெயஜானகி ராஜேஷ், உமா நடராஜன் தலைமை வகித்தனர். 15க்கும் மேற்பட்ட சிறுமியர் கலந்து கொண்டு பக்தி பாடல்கள், ஸ்லோகங்களை சமர்ப்பணம் செய்தனர். மடத்தின் நிர்வாகி வெங்கேடசன் பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மடத்தில் நடந்த பிரதோஷ விழாவில் சந்த்ர மவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.