ADDED : மார் 02, 2026 06:56 AM

அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் 51வது விளையாட்டு நாள் விழா நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார்.
தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், கவுரவ தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் ராகவன் ஆண்டறிக்கை வாசித்தார். இந்திய கபடி வீரர் மணத்தி கணேசன் பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டன.
