UPDATED : மே 07, 2026 07:43 PM
ADDED : மே 07, 2026 07:41 PM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.,) விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கைக்கான தடகள, குழு விளையாட்டுகளுக்கான தேர்வு நடந்தது.
6 - 9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்கள் 400 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு தடகளத்தில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் தேர்வு, குழு விளையாட்டுகளின் கீழ் கூடைபந்து, கிரிக்கெட், கால்பந்து, கபடி, வாலிபால், ஹேண்ட்பால் போட்டிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு நடந்தது.
இதில் தேர்வானவர்கள் மே 15 முதல் நடக்கும் மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் பங்கேற்பர். ஆணைய முதுநிலை மண்டல மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஏற்பாடுகளை செய்தனர். பயிற்சியாளர்கள் ஜோதிபாசு, பிரபு, அரவிந்த், விஜயகுமார், ராஜசேகர், பியாரா, கலைஞானம், ராஜேஷ், ரஞ்சித்குமார், தீபா ஒருங்கிணைத்தனர்.
