/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி
/
மதுரை கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி
ADDED : பிப் 13, 2024 05:07 AM

மதுரை ; மதுரை மத்திய சிறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்(ஐ.ஓ.சி.,) சார்பில் கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டது.
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைகளில் உள்ள கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கும் பரிவர்த்தன் என்ற விளையாட்டு பயிற்சி திட்டம் ஐ.ஓ.சி., சார்பில் 2021ல் துவங்கப்பட்டது. பூப்பந்து, கைப்பந்து, செஸ், டென்னிஸ், கேரம் விளையாட 4 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேவையான விளையாட்டு பொருட்கள் மற்றும் கருவிகளை நிறுவனமே வழங்கி விடும்.
தமிழகத்தில் மதுரை மத்திய சிறையில் இத்திட்டம் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார், ஐ.ஓ.சி., தமிழக பிரிவு தலைவர் அண்ணாதுரை, மண்டல மேலாளர் மகேஷ் கலந்து கொண்டார். காணொலி மூலம் ஐ.ஓ.சி., தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா துவக்கி வைத்தார்.