ADDED : ஆக 20, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்; திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் சுங்குராம்பட்டி அருகே மகாத்மா காந்தி நகரில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த 2 வயது புள்ளிமானை தெரு நாய்கள் விரட்டின.
தப்பி ஓடிய மான், முள் வேலியை தாண்ட முடியாமல் கீழே விழுந்தது. மானின் பின்பக்க பகுதியை நாய்கள் கடித்துக் குதறின.
பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் மான் இறந்தது.