ADDED : பிப் 16, 2026 05:49 AM
திருமங்கலம்: திருமங்கலம் வட்டார கண்மாய்கள் வயல்வெளிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வசிக்கின்றன. இவை தண்ணீர், உணவு தேடி கிராம பகுதிகளுக்குள் வருகின்றன. அவ்வாறு வரும்போது அவை வாகன விபத்தில் சிக்கியும், நாய்களால் துரத்தி கடிக்கப்பட்டும் பலியாகி வருகின்றன.
நேற்று காலை கரடிக்கல் கண்மாய் பகுதியில் இருந்து 3 வயது பெண் புள்ளிமான் உணவு, தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வந்தது. இந்த மானை கண்ட நாய்கள் துரத்திக் கடித்ததில் மான் காயமடைந்தது.
பிரியங்கா என்பவரது தோட்டத்திற்குள் வந்த மானை பொதுமக்கள் மீட்டு தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் மான் பலியானது.
வனத்துறையினர் மானின் உடலை பரிசோதனை செய்தனர். அந்தமான் வயிற்றில் 2 மாத குட்டி இருந்தது தெரியவந்தது. வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
