ADDED : மே 30, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் வசந்த உற்ஸவம் நிறைவடைந்தது.
கோயிலில் மே 21ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய திருவிழாவில் தினம் இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி வசந்த உற்ஸவம் நடந்தது. நேற்று வசந்த உற்ஸவம் முடிந்து சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று பால்குட திருவிழா நடக்கிறது.
