ADDED : மார் 21, 2026 07:14 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் வசந்த நவராத்திரி மஹோற்ஸஹவம் மார்ச் 19ல் துவங்கியது.
தினமும் காலையில் அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜை, மாலையில் அலங்காரமாகி சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. நிறைவு நாளான மார்ச் 28ல் யாகசாலை பூஜை முடிந்து அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை ஸ்ரீ அஷ்ட வராகி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
