sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தத்தளித்த மதுரை: குடியிருப்புகளில் மழை நீர்: அமைச்சர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு

/

தத்தளித்த மதுரை: குடியிருப்புகளில் மழை நீர்: அமைச்சர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு

தத்தளித்த மதுரை: குடியிருப்புகளில் மழை நீர்: அமைச்சர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு

தத்தளித்த மதுரை: குடியிருப்புகளில் மழை நீர்: அமைச்சர், கலெக்டர், கமிஷனர் ஆய்வு

1


ADDED : அக் 26, 2024 05:17 AM

Google News

ADDED : அக் 26, 2024 05:17 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நகரில் நேற்று பெய்த தொடர் மழையால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா,மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் ஆய்வு செய்தனர். போனில் மதுரை நிலவரம் குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளான பிபீகுளம் முல்லைநகர், பாண்டியன் நகர் பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மாநகராட்சி சார்பில் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முல்லை நகரில் தேங்கிய மழைநீரை பிபீகுளம் கால்வாய், சின்ன சொக்கிக்குளம் கால்வாய் வழியாக உலகத்தமிழ்ச்சங்கம் எதிரேயுள்ள கரும்பாலை கால்வாய் வழியாக வைகை ஆற்றில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முல்லைநகர் தனபால் பள்ளி நிவாரண மையத்தில்மக்கள் தங்க வைக்கப்பட்டனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து தரப்பட்டன. மழைநீர் தடையின்றி செல்ல மாநகராட்சி குழு தயாராகஇருந்தது. நீர் வழித்தடத்தில் தடைகளை அகற்ற 5 மண் அள்ளும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருந்தன.

இதற்கிடையே நேற்றுஇரவு அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கலெக்டர் சங்கீதாவிடம் மழை பாதிப்பு, நிவாரணப் பணிகள் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.

ஆய்வின் போது வெங்கடேசன் எம்.பி., தளபதி எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், ஆர்.டி.ஓ., ஷாலினி, மாநகராட்சி மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி உடனிருந்தனர். மதுரை மழை பாதிப்புகள் குறித்து காணொலியில் அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.

செல்லுாரில் மீண்டும் வெள்ளம்: இதற்கிடையே செல்லுார் பூந்தமல்லி நகர் பாலம், குப்பை பாலம், குதிரை பாலத்தின்கண்களில் ஆகாயத்தாமரை செடிகள் அடைத்ததால் நேற்றிரவு மழைநீர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதி உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் மீண்டும் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் துாக்கத்தை தொலைத்தனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் பலனில்லை என புலம்பினர்.

இருநாட்களுக்கு முன்புதான் இப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us