/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ரூ.6.91 லட்சம் நிதி ஒதுக்கீடு; தினமலர் செய்தி எதிரொலி

ADDED : அக் 16, 2025 04:39 AM
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்த முதற்கட்டமாக ரூ.6.91 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி வார்டுகளில் 66 இடங்களில் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இதுவரை 54 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாம்களை அந்தந்த வார்டு உதவி, இளநிலை பொறியாளர்களே ஏற்பாடு செய்து செலவுகளையும் ஏற்கின்றனர். அவர்கள் மனஉளைச்சலில் உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக 5 மண்டலங்களுக்கும் முதற்கட்டமாக ரூ.6.91 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.1.38 லட்சம் ஒதுக்கி கமிஷனர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.
உதவிப்பொறியாளர்கள் கூறுகையில், முதற்கட்ட நிதி ஒதுக்கியது ஆறுதலாக உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் இதுவரை குறைந்தது 10 முகாம்கள் நடந்துள்ளன. ஒரு முகாமிற்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. தற்போது நிதி அடிப்படையில், முகாமிற்கு ரூ.13 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது' என்றனர்.