/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் இன்று துவக்கம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் இன்று துவக்கம்
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் இன்று துவக்கம்
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 15, 2025 03:53 AM
மதுரை: தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்' இன்று (ஜூலை 15) முதல் ஆக.15 வரை நடக்கிறது. இத்திட்டத்தில் முகாம் நடக்கும் பகுதியில் தன்னார்வலர்கள் வீடுவீடாக சென்று அரசு துறைகளின் சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விண்ணப்ப படிவங்களை வழங்கியுள்ளனர். முகாம் நடக்கும் பகுதியில் ஒருவாரமாக சென்று முகாம் பற்றி எடுத்துக் கூறியுள்ளனர். அப்பகுதியினர் அம்முகாமில் சென்று விண்ணப்பங்களை வழங்கலாம்.
மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் முகாமில் மட்டுமே வழங்கப்படும். அதற்காக ஆதார், ரேஷன் கார்டு போன்றவற்றுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களின் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூலை 15ல் மேலுார் சந்தைப் பேட்டை நகராட்சி சமுதாயக் கூடம், பரவை ஏ.எஸ்.ஆர்., திருமண மண்டபம், ஜூலை 17 ல் ஆனையூர் மாநகராட்சி அலுவலகம், மடீட்சியா அரங்கம், பெரியார் பஸ்ஸ்டாண்டில் சுற்றுலா பிளாசா, ராணி பொன்னம்மாள் கல்யாண மகால், ஜெய்ஹிந்த்புரம் சேதுராஜன் பாத்திமா திருமண மண்டபம், திருமங்கலம் சிவசக்தி மகால், ஜூலை 18ல் சோழவந்தான் எம்.வி.எம். கல்யாண மண்டபம், ஜூலை 19ல் உசிலம்பட்டியில் ஆர்.சி. சிறுமலர் ஆரம்பப் பள்ளி, ஜூலை 22ல் திருமங்கலம் சிவலட்சுமி மகால், மேலுார் தங்கநாச்சியார் திருமண மண்டபம், அலங்காநல்லுார் சமுதாயக் கூடத்தில் நடக்க உள்ளது.
ஜூலை 15 ல் ஒத்தக்கடை எஸ்.எஸ்.மஹால், செட்டிக்குளம் கிராமச்சாவடி, கொக்குளம் ஏ.ஏ.மஹால், கிடாரிப்பட்டி வெற்றி மஹால், ஜூலை 16 ல் உத்தப்பநாயக்கனுார் லட்சுமி மஹால், தனிச்சியம் மந்தைத் திடல், டி.கல்லுப்பட்டி பி.கொண்டுரெட்டிபட்டி சண்முகா மஹால், பெருங்காமநல்லுார் வீரத்தியாகிகள் மணிமண்டபம், செல்லம்பட்டி சீலக்காரி அம்மன் கல்யாண மண்டபம், கூடக்கோவில் சமுதாயக் கூடம். ஜூலை 18 ல் மேலப்பனங்காடி மகிழ் மஹால், வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி திருமூர்த்தி மஹால், புதுச்சுக்காம்பட்டி சமுதாயக் கூடம், வடிவேல்கரை கபிலன் மஹால், கள்ளிக்குடி திருமால் வி.பி.ஆர்.சி., வளாகம். ஜூலை 19ல் முடுவார்பட்டி மந்தைத் திடல், டி.கல்லுப்பட்டி சமுதாய கூடம். ஜூலை 22 ல் கொட்டாம்பட்டி எம்.பி.மஹால், திருப்பரங்குன்றம் மணிமஹால், மேற்கு பஞ்சாயத்தில் இரணியம் பஞ்., அலுவலகம் அருகில், ஜூலை 23ல் உசிலம்பட்டி தமிழரசி மஹால், சேடப்பட்டி சமுதாய கூடம், திருமங்கலம் மிராகில் மஹால், கள்ளிக்குடி வி.பி.ஆர்.சி., அலுவலக வளாகம், காடனேரி சமுதாய கூடம், நரசிங்கம்பட்டி மந்தைத் திடலில் நடக்கிறது.