UPDATED : அக் 18, 2026 12:58 AM
ADDED : அக் 17, 2026 09:07 PM

மதுரை: முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான ஆடவர், மகளிர் பிரிவு தடகளப் போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கான ஹாக்கிப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது.
அமைச்சர் நிர்மல் குமார் போட்டிகளைத் துவக்கி வைத்து வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார், துணை மேயர் நாகராஜன், எம்.எல்.ஏ.,க்கள் கல்லானை, கருப்பையா, கோபிசன், விஜய் கலந்து கொண்டனர்.
தடகளப் போட்டி முடிவுகள்:
பள்ளி மாணவர்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த சந்தோஷ் முதலிடம் பெற்றார். ஈரோடு பிரனேஷ் இரண்டாமிடம், ராமநாதபுரம் லத்தீஸ் மூன்றாமிடம் பெற்றனர். உயரம் தாண்டுதலில் கோவை சக்திவேல் முதலிடம், செங்கல்பட்டு முகமது உஷாமா இரண்டாமிடம், திருச்சி எஸ்.டி.ஏ.டி., மோனிஷ் மூன்றாமிடம் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டத்தில் கோவை சர்வேஷ் தேவ் முதலிடம், விழுப்புரம் ஹேமபிரசாத் இணர்டாமிடம், திருச்சி கிருபாநிதி மூன்றாமிடம் பெற்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் தென்காசி உதயசூர்யா முதலிடம், திருவள்ளூர் பவேஷ் ராஜ்குமார் இணர்டாமிடம், மதுரை விஷ்ணுவிஷால் மூன்றாமிடம் பெற்றனர். குண்டு எறிதலில் தேனி தாரனேஷ் முதலிடம், சென்னை ஓம் ஈஸ்வர் காளை இரண்டாமிடம், காஞ்சிபுரம் சபரீஷ் மூன்றாமிடம் பெற்றனர். நீளம் தாண்டுதலில் சென்னை பிரணாத் முதலிடம், தஞ்சாவூர் பாலகிருஷ்ணன் இரண்டாமிடம், நீலகிரி ஸ்ரீசக்திவேல் மூன்றாமிடம் பெற்றனர்.
மாணவிகள் பிரிவு:
மாணவிகளுக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சென்னை தன்சிகா முதலிடம், திருநெல்வேலி கவுசிகா, விருதுநகர் நிவேதா மூன்றாமிடம் பெற்றனர். ஆகியோரும் வென்றனர். குண்டு எறிதலில் சென்னை திவ்யதர்ஷினி முதலிடம், காரைக்குடி ஸ்ரீலேகா இரண்டாமிடம், சேலம் வினுஷிகா மூன்றாமிடம் பெற்றனர். நீளம் தாண்டுதலில் திருநெல்வேலி ஜெனிஸ்டா ஷானு முதலிடம், திருச்சி மிருனிஷா குமார் இரண்டாமிடம், ஈரோடு ரேணுகாதேவி மூன்றாமிடம் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டத்தில் கோவை மிருத்திகா முதலிடம், செங்கல்பட்டு தேவசகானா இரண்டாமிடம், திருச்சி தன்யமிரா மூன்றாமிடம் பெற்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் துாத்துக்குடி சகாய ஜெமிமா முதலிடம், சேலம் தீப்தசரானா இரண்டாமிடம், திருநெல்வேலி எட்வினா ஜேசன் மூன்றாமிடம் பெற்றனர்.
மாநில அளவில் முதலிடம் பெறும் வீராங்கனைகளுக்கு ரூ.ஒருலட்சம், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.75ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.50ஆயிரம் பரிசுத்தொகை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
